தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பெறுவதற்காக, ஆளுநரின் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 11ம் தேதி ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அழைத்து ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, முதல் தலைமுறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார்.
மேலும், மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பெறும்படி வாய்மொழியாக உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து கல்வியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை நேற்று அனுப்பப்பட்டது.
அதில், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் வாக்காளர் அட்டை விவரங்களை சேகரித்து மார்ச் 19ம் தேதிக்குள் வழங்கும்படி கூறப்பட்டிருந்தது. இதற்கு கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
பாஜக பிரச்சாரத்துக்கு உதவ மாணவர்களின் தரவுகள் சேகரிக்கப்படுவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டினர். மாணவர்கள் வாக்காளர் அட்டை விவரங்களை ஆளுநர் கோருவதற்கு பல்கலைக்கழக சட்டங்கள் அனுமதிக்கிறதா என்றும் கேள்வி எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, இந்த சுற்றறிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
'ஜீசஸ் கூடதான் குடிச்சிருக்காரு'... மது குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பகீர் பதில்!
‘ஆமா! குடும்ப ஆட்சிதான்! தொண்டர்கள் உற்சாகம்... அதிர வைக்கும் திமுக!
மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை... பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு... ஓபிஎஸ் திடீர் முடிவு!
கல்யாண வீட்டில் குத்தாட்டம் போட்ட ‘பிரேமலு’ நடிகை... வைரல் வீடியோ!