அதிகாரிகள் ஷாக்.. இரவில் பள்ளி விடுதியிலிருந்து 89 மாணவிகள் மாயம்!


விடுதி அறை.

உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில் அரசு நடத்தும் குடியிருப்புப் பள்ளியில் நடத்தப்பட்ட திடீர் இரவு சோதனையில், அங்கு தங்கிப் படிக்கும் மொத்தமுள்ள 100 மாணவிகளில் 11 பேர் மட்டுமே இருப்பதைக் கண்டறிந்தனர். இது தொடர்பாக வார்டன் உட்பட நான்கு பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நீதிபதி நேஹா சர்மா கூறியதாவது: பரஸ்பூர் கஸ்தூரிபா காந்தி குடியிருப்பு பெண்கள் பள்ளியில் திங்கள்கிழமை இரவு திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. அங்கு மொத்தம் 100 மாணவிகள் தங்கி படிக்கின்றனர், ஆனால், ஆய்வின்போது 11 மாணவிகள் மட்டுமே பள்ளியில் இருந்தனர். 89 மாணவிகள் இல்லாதது குறித்து வார்டன் சரிதா சிங்கிடம் கேட்டபோது திருப்திகரமான பதில் இல்லை. இது ஒரு தீவிர அலட்சியம். குடியிருப்பு பெண்கள் பள்ளிகள் இந்த முறையில் நடத்த முடியாது" என்று கூறினார்.

மாணவிகள்

மாவட்ட கல்வி அதிகாரி பிரேம் சந்த் யாதவ் கூறுகையில், : மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், இது தொடர்பாக பள்ளி வார்டன், ஒரு முழுநேர ஆசிரியர், காவலாளி மற்றும் பிஆர்டி ஜவான் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இதனுடன், ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பணியில் உள்ள காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட இளைஞர் நல அலுவலருக்கு தனி கடிதம் எழுதப்பட்டுள்ளது" என்றார்.

x