10,391 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்... 18 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை சம்பளம்!


இஎம்ஆர்எஸ் பள்ளி மாணவர்கள்.

நாடு முழுவதும் உள்ள இஎம்ஆர்எஸ் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பழங்குடியின மாணவர்களுக்கான இஎம்ஆர்எஸ் பள்ளிகள் (Eklavya Model Residential Schools) இயங்கி வருகின்றன. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பழங்குடியின குழந்தைகளுக்கு அவர்களின் குடியிருப்பு பகுதிகளிலேயே இந்த பள்ளிகள் இலவசக் கல்வியை வழங்குகின்றன. இந்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தால் இப்பள்ளிகள் செயல்படுத்தப்படுகிறது

இஎம்ஆர்எஸ் பள்ளிகள்

நாடு முழுவதும் இப்பள்ளிகளில் 10, 391 காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்வர், கணக்காளர் உள்ளிட்ட பல பணிகளுக்கு பட்டப்படிப்புடன் பி.எட் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஊதியம் பணி நிலைக்கு ஏற்றபடி 18,000 முதல் 2,09,200 ரூபாய் வரையில் அளிக்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இஎம்ஆர்எஸ் இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

x