சட்ட பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தும் மாணவர்கள் பரிமாற்ற திட்டம் தொடக்கம்


சென்னை: சட்டப் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தும் மாணவர்கள் பரிமாற்ற திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், புதுமையான கற்பித்தல் முறையின் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு தேசியசட்டப் பள்ளிகள் மற்றும் சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ‘மாணவர் பரிமாற்றத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது. சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மாணவர் பரிமாற்றத் திட்டத்தை மேற்கொள்ளும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடுடாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கர்னல் பேராசிரியர் என்.எஸ்.சந்தோஷ்குமார் குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துமுதல் மாணவர் பரிமாற்றத் திட்டத்தைத் நேற்று தொடங்கினார். இந்தத் திட்டம் இன்றுமுதல் செப்.14-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப் பட்டு உள்ளது. இதையொட்டி 3 மற்றும் 4-ம் ஆண்டுஹானர்ஸ் சட்டப் பட்டப்படிப்புகளில் இருந்து மொத்தமாக 20 மாணவர்கள், குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துக்கு சென்றுள்ளனர்.

மாணவர்களுக்கு வரவேற்பு: இந்த திட்டத்தின்படி குஜராத் சென்ற மாணவர்களை, குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.சாந்தகுமார் வரவேற்றார்.

தொடர்ந்து தமிழக மாணவர்கள் அந்த பல்கலைக்கழகத்தின் வகுப்பறை கண்காணிப்பு, நூலக வளங்களைஆராய்தல், ஆசிரியர்களுடன் கலந்துரையாடுதல், பல்கலைக்கழக மையங்களைப் பார்வையிடுதல், ‘காற்று மற்றும் விண்வெளி சட்டம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவுள்ளனர்

x