பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் அக்.21-ல் ஆரம்பம் - உத்தேச அட்டவணை வெளியீடு


சென்னை: பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் உத்தேசமாக அக்டோபர் 21-ம் தேதி தொடங்கும் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: "பாலிடெக்னிக் டிப்ளமா படிப்புகளுக்கான உத்தேச செமஸ்டர் தேர்வு கால அட்டவணை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர் மாதம் 21 முதல் நவம்பர் மாதம் 9ம் தேதி வரை நடைபெறும்.

செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 7ம் தேதி தொடங்கும். முழு விவரங்களுடன் கூடிய தேர்வு அட்டவணை தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக வெளியிடப்படும். செமஸ்டர் விடுமுறை முடிந்து வகுப்புகள் டிசம்பர் 2ம் தேதி தொடங்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

x