சென்னை ஐஐடி வளாகத்தில் சிக்கிய 12 அடி மலேசியன் மலைப்பாம்பு: மாணவர்கள் அதிர்ச்சி!


கோட்டூர்புரம் ஐஐடி வளாகத்தில் சிக்கிய மலைப்பாம்பு.

சென்னை கோட்டூர்புரம் ஐஐடி வளாகத்தில் 12 நீளம் கொண்ட 30 கிலோ எடையுள்ள மலேசியன் மலைப்பாம்பு பிடிப்பட்டதால் பரபரப்பு எற்பட்டுள்ளது கிண்டி பாம்பு பண்ணையில் இருந்து தப்பிய பாம்பாக இது இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட மலைப்பாம்பு

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஐஐடி வளாகத்திற்குள் பாம்பு சுற்றி வருவதாக நேற்று இரவு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அடர்ந்த பகுதிகளுக்கு நடுவே ராஜ வகை மலைப்பாம்பு பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். சுமார் 12 அடி நீளம் கொண்ட அந்த மலைப் பாம்பு பிடிபடாமல் ஆட்டம் காட்டியது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வனத்துறை அதிகாரிகள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர்.

பின்னர் 12 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகள் கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர். இந்த வகையான பாம்பு உலகிலேயே அதிக நீளம்‌ வளரக்கூடியது என்றும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிண்டி பாம்பு பண்ணையில் இருந்து தப்பிய பாம்பாக இருக்காலம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

மேலும் கிண்டி பாம்பு பண்ணையில் ஏற்கெனவே இதுபோன்று 2 பாம்புகள் உள்ள நிலையில் மூன்றாவதாக இந்த பாம்பு ஓப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ராஜ மலைப்பாம்பு அல்லது பின்னற்கோடு மலைப்பாம்பு(RETICULATED PYTHON) வகையைச் சார்ந்த இந்த பாம்பு மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா காடுகளில் அதிகமாக காணப்படும், இதனால் மனிதர்களுக்கு ஆபத்து எனக் கருத முடியாது,‌ இதில் பெரிய வகை பாம்புகள் வயது‌ வந்த மனிதனைக் கொல்ல போதுமான சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் பெரும்பாலும் மனிதர்களை தாக்கது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

x