2 ஆயிரத்து 582 ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமன போட்டித் தேர்வுக்கு, பட்டப்படிப்பு மற்றும் பி.எட் முடித்தவர்கள் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பணிகளில், 2 ஆயிரத்து 222 காலியிடங்கள் உள்ளன. இதற்கான நேரடி நியமன போட்டித் தேர்வு, அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு, பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வி இயக்ககம்,தொடக்க கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் காலியாக இருந்த 360 பட்டதாரி மற்றும் வட்டார வள மைய பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டாரவள மைய பயிற்றுனர் பணியிடங்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 582 ஆக அதிகரித்துள்ளது.
கூடுதல் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை https://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
‘ஜெயிலர் 2’ - மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி!
பதற்றம்! சிப்காட்டுக்கு எதிராக போராட்டம்; விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஷமி மீது கேஸ் போட மாட்டீங்கள்ல? மும்பை போலீஸை ஜாலியாக வம்பிழுத்த டெல்லி போலீஸ்!
வாட்ஸ் அப் வழங்கும் கசப்பான புத்தாண்டு ‘பரிசு’... அன்லிமிடெட் சாட் பேக்கப்புக்கு செக்!