கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது... எப்படி பார்ப்பது... முழு விபரம்!


தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2023-24 ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் கடந்த 12 ம் தேதி முதல் விண்ணப்பதிவு தொடங்கியது.

இந்த படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதால் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு வெளியானது.

இந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. சிறப்புக் கலந்தாய்வு, 7.5 சதவீத கலந்தாய்வு மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடைபெறும் எனவும் மற்ற அனைத்து இடங்களிலும் ஆன்லைன் மூலம் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

x