சீனாவை முந்திய இந்தியா... அமெரிக்காவில் உயர்கல்வி பெறுவதில் இந்திய மாணவர்கள் புதிய சாதனை


அமெரிக்காவில் இந்திய மாணவர்

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில், சீன தேசத்தின் மாணவர்களை முந்தி இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு உயர்கல்வி பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தற்போது புதிய உச்சம் தொட்டுள்ளது. கொரோனா காலத்துக்குப் பின்னர் படிப்படியாக உயர்ந்த இந்த எண்ணிக்கை, முன்னிலை வகிக்கும் சீனாவை பின்தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறது.

வெளிநாட்டு படிப்புக்கு கவுன்சிலிங்

அமெரிக்காவில் உயர்கல்வி பயில செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த கல்வியாண்டில்(2022-23) 2.69 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த வகையில் அமெரிக்காவில் உயர்கல்வி பெறும் 10 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 25 சதவீதத்தை கடந்துள்ளது. சர்வதேச உயர்கல்வி விவகாரங்களை அலசும் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எஜூகேஷன் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்திய மாணவர்களின் அமெரிக்க உயர்கல்வி நாட்டத்துக்கு ஏற்ப இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களும், மாணவர்களுக்கு வகைதொகையாக விசாக்களை வழங்கி சாதனை படைத்துள்ளன. 2023, ஜூன் - ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் சுமார் 95 ஆயிரம் விசாக்களை வழங்கியுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம அதிகமாகும்.

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள்

அமெரிக்கா - சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் உரசல் காரணமாக, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயில்வதில் முதலிடத்தில் இருந்த சீனா, அந்த இடத்தை இந்தியாவிடம் பறிகொடுத்திருக்கிறது.

இந்தியாவிலிருந்து உயர்கல்வி பெறச் செல்வதோடு, படிப்பை முடித்ததும் அங்கேயே பன்னாட்டு நிறுவனங்களில் பணியில் சேர்ந்து அமெரிக்காவிலேயே செட்டிலாகும் போக்கு இந்தியர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனாலும் இந்திய மூளைகளுக்கு அமெரிக்கா சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர் என்பது மெச்சத்தகுந்தது என்றபோதும், அவர்களால் தாய்நாட்டுக்கு என்ன பயன் என்பதில் இந்தியா பின்னடவையே சந்திக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

கவுண்டர் பையனைத்தான் கல்யாணம் கட்டுவோம்; உறுதிமொழி எடுத்த பெண்கள்: திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை!

HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!

x