பீகாரில் தனது ஹேண்ட் பேக்கில் இருந்த 35 ரூபாய் மாயமானதை அடுத்து, கோயிலுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று சத்தியம் வாங்கிய ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
பீகார் மாநிலம், பன்கா மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக நீட்டு குமாரி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தண்ணீர் பாட்டிலை எடுத்து வருவதற்காக, வகுப்பறையில் இருந்த தனி ஹேண்ட் பேக்கை ஒரு மாணவரிடம் எடுத்துவரச் சொன்னார். அப்போது அந்த பேக்கை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 35 ரூபாய் திருடுபோயிருந்தது.
இந்தப் பணத்தை யாராவது எடுத்தீர்களா என்று மாணவர்களிடம் கேட்டுள்ளார் நீட்டு குமாரி. ஆனால், தாங்கள் யாரும் பணத்தை எடுக்கவில்லை என்று மாணவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அவர், அருகில் உள்ள கோயிலுக்கு 122 மாணவர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். தாங்கள் பணத்தை எடுக்கவில்லை என்று கூறியபடியே சத்தியம் செய்ய வைத்துள்ளார். ஆசிரியையின் இந்த செயலை பொறுத்துக் கொள்ள முடியாத பெற்றோர்கள், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், 35 ரூபாய்க்காக சத்தியம் வாங்கியது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். 35 ரூபாய்க்காக, மாணவர்களை இப்படி தரக்குறைவாக ஆசிரியை நடத்திய சம்பவம், சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
300 கிலோ எடை, ஆறரை அடி உயரம்... ஜெயலலிதா உருவத்தில் பிரம்மாண்ட கேக்!
முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து; விரைவில் அமலுக்கு வருகிறது பொது சிவில் சட்டம்!
திருமணம் செய்ய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை கடத்திய தொழிலதிபர்: கூலிப்படையினரும் சிக்கினர்!
காதலனின் கண் முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி... 4 சிறுவர்கள் கைது!