பீகாரில் அரசு நடத்தும் பள்ளிகள் இனி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பீகாரில் தற்போது பள்ளி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரமாக உள்ளது. இந்நிலையில் அரசு நடத்தும் பள்ளிகளின் நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இனி பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப் பேரவையில் வெளியிட்டார். ஆனால் அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து, எதிர்க்கட்சியினர் பேரவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது நிதிஷ்குமார் கூறுகையில், "கல்வி நடவடிக்கைகளுக்கான பள்ளிகளின் நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இருக்க வேண்டும். அது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கக்கூடாது. நான் உடனடியாக துறையின் தகுதிவாய்ந்த அதிகாரியை அழைத்து நேரங்களை மாற்றும்படி அறிவுறுத்துவேன். நீங்கள் (எதிர்க்கட்சி உறுப்பினர்கள்) என்னிடம் முன்பே சொல்லியிருக்க வேண்டும். இப்போது புதிய நேரங்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும்” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
அமித் ஷா மீதான ‘கொலைகாரர்’ அவதூறு... ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
எடப்பாடி பழனிசாமி காரை வழிமறித்து கதவைத் திறக்க முயற்சி... வாலிபரால் பெரும் பரபரப்பு!