அரசுப் பல்கலைக்கழக வளாகங்களில் இலவச வைஃபை வசதி வழங்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
ஒடிசா அரசு நடத்தும் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களும் வளாகங்களில் வைஃபை வசதிகளை நிறுவுவதற்கான விரிவான மதிப்பீடுகளை வழங்குமாறு உயர்கல்வித் துறையின் சிறப்புச் செயலர் ராமகாந்த நாயக் கேட்டுக் கொண்டுள்ளார். மாணவர்களுக்கு பெரும்பாலான ஆய்வுகள் தற்போது ஆன்லைனில் இ-புத்தங்களாகவே உள்ள நிலையில், அரசுப் பல்கலைக் கழகங்களில் இலவச வைஃபை வசதி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் ஆன்லைனில் பைல்கள் மற்றும் மின் புத்தகங்களை எளிதாக பெறவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும். ஏற்கெனவே ஒடிசாவில் உள்ள உத்கல் பல்கலைக்கழகம் மற்றும் ரமா தேவி மகளிர் பல்கலைக்கழகங்களின் வளாகங்களில் இலவச வைஃபை வழங்கி வரும் நிலையில், சமீபத்திய நடவடிக்கை மற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயனளிக்கும்.
அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு இலவச வைஃபை மற்றும் 1ஜிபி டேட்டா வழங்குவதாக ஆளும் பிஜேடி தனது தேர்தல் அறிக்கையில் 2019 சட்டசபை மற்றும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்குறுதி அளித்தது. அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!