1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!


ஜெயபிரகாஷ்

கரூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் 1,000 ரூபாயில் செயற்கைகோள் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஜெயபிரகாஷ் மிகச்சிறிய அளவில் செயற்கைகோள் ஒன்றை உருவாக்கியுள்ளார். இன்னர் ஆர்பிட்டல் செயற்கைக்கோள் என்ற தனது புராஜெக்ட்டைவெறும் 1,000 ரூபாயில் அவர் செய்து முடித்துள்ளார்.

அவரது இந்த செயற்கைகோள் மூலம் Troposphere மற்றும் Stratosphere வரை சென்று அங்கு இருக்கக்கூடிய வெப்பநிலை, அழுத்தம், உயரம், கார்பன் மோனோக்ஸைடின், ஹைட்ரஜன், மீத்தேன் ஆகியவற்றின் அளவுகளை அறிந்து எஸ்.டி.கார்டில்ல் பதிவிட்டுவிடும்.

செயற்கைக்கோள்(பைல் படம்)

அதன் பின்னர் அதிலிருந்து டேட்டாவை எடுத்து பகுப்பாய்வு செய்தால் அந்த உயரத்தில் வானில் உள்ள நிலையை அறிய முடியும் என்கிறார் ஜெயபிரகாஷ். இந்த சிறிய செயற்கைகோள் 155 கிராம் எடை கொண்டது என்றும், இது வெர்சன் 1 செயற்கைகோள் தான், வெர்சன் 2வை உருவாக்கி வருகிறேன் என்றும் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

எளிய மக்கள் ஒரு ஆலையினால் எவ்வளவு மாசு ஏற்படுகிறது என்பதை இந்த செயற்கைகோள் உதவியுடன் அறியலாம், இதற்காக நாசா அல்லது இஸ்ரோவிடம் சென்று கேட்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். மாணவரின் இந்த கண்டுபிடிப்பு அறிவியலாளர்களின் மத்தியில் பெரும் பாராட்டுதலை பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!

x