குன்னூர் பிருந்தாவன் பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிக்கு தகுதி


குன்னூர்: குன்னூரில் சி.ஐ.எஸ்.சி.இ கவுன்சில் சார்பில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் குன்னூர் பிருந்தாவன் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பிருந்தாவன் பள்ளியில் டெல்லி சிஐஎஸ்சிஇ கவுன்சில் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் 14 வயதினர் மற்றும் 19 வயதினருக்கு உட்பட்ட பிரிவினருக்கான போட்டிகளில் கோவை ஸ்டேன்ஸ் பள்ளி, சென்னை என்.பி.எஸ் பள்ளி, கேத்தி லைய்ட்லா பள்ளி, கோத்தகிரி செயின்ட் ஜூட்ஸ் பள்ளி, பேரக்ஸ் ஹோலி இன்னசென்ட் பள்ளி, உதகை கிரசன்ட் பள்ளி, மதுரை என்.டி.ஏ பள்ளி உட்பட்ட பல்வேறு அணிகள் பங்கேற்றன.

14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கோவை ஸ்டேன்ஸ் பள்ளிக்கு எதிரான போட்டியில் 2 - 0 என்ற கோள் கணக்கில் குன்னூர் பிருந்தாவன் பள்ளி அணியினர் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். 17 வயதுக்குட்பட்டோர் லீக் முறையில் நடந்த போட்டியில் 6 புள்ளிகளுடன் பிருந்தாவன் பள்ளி இரண்டாம் இடம் பிடித்தது. 19 வயது உட்பட்டோர் லீக் சுற்றில் நடந்த போட்டியில் 7 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.

உதகை கிரசன்ட் பள்ளி மற்றும் சிஐஎஸ்சிஇ கவுன்சில் சார்பில் ஹாக்கி போட்டி ஹெப்ரான் பள்ளியில் நடந்தது. இதில், மொத்தம் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஏழு அணிகளும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஐந்து அணிகளும்,19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நான்கு அணிகளும் கலந்து கொண்டனர்.

இதில், குன்னூர் பிருந்தாவன் பள்ளி மாணவர்கள் 17 பேர் தேசிய அளவில் சிஐஎஸ்சிஇ கவுன்சில் சார்பாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த பள்ளி ஹாக்கி பயிற்சியாளர் சதீஷ்க்கும் பள்ளியின் தாளாளர்கள் வாமனன், மயூர் வாமனன், முதல்வர் டாக்டர் டயானா சிவகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

x