அரசு பள்ளிளைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்... தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் அறிவுறுத்தல்!


வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளைப் பார்த்தும், அதுபோல அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளைப் பார்த்தும் கற்றுக் கொண்டு வளர்ச்சியடைய வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 33 நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளைப் பார்த்தும், அதுபோல அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளைப் பார்த்தும் கற்றுக் கொண்டு வளர்ச்சியடைய வேண்டும்.

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியில் சிறுபான்மையினர் பள்ளிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. தனியார் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்தை தவிர்க்கக் கூடாது என்பதற்காகத்தான் தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர்களுக்கு புத்தாக்க வகுப்புகள் ஏற்படுத்தினோம். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது" என்று கூறினார்.

ஆயி என்ற பூரணம் அம்மாளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்.

மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள கோர்ட்யார்ட் ஹோட்டல் கூட்டரங்கில் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' நிகழ்ச்சியில் தனது நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய ஆயி என்ற பூரணம் அம்மாளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

ரூ.1.10 கோடி நிதியளித்த அப்பள வியாபாரி ராஜேந்திரனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய அமைச்சர்.

இதே போல பள்ளி வளர்ச்சிக்கு ரூ.1.10 கோடி நிதியளித்த அப்பள வியாபாரி ராஜேந்திரனுக்கும், பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ரூ.20 லட்சம் அளித்த பேராசிரியர் சாலமன் பாப்பையா ஆகியோருக்கு அமைச்சர் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.செள.சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் வாசிக்கலாமே...


கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட்?: இன்று கூடுகிறது அதிமுக தொகுதி பங்கீட்டுக்குழு!

பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி: சோகத்தில் முடிந்த சுற்றுலா!

x