8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்... முதல்வரின் மகிழ்ச்சி அறிவிப்பு!


அரசின் இலவச சைக்கிள்

அசாம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் மிதிவண்டி வழங்கப்படும் என மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் மாணவர்களுடைய கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும்,மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியைத் தொடரும் விதமாகவும் மாணவர்களை ஈர்க்கவும், அவர்கள் நலனுக்காகவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இதன் வாயிலாக மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வியை தொடர்ந்து பயின்று வருகிறார்கள்.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அந்த திட்டத்திற்காக மாநில அரசு முதல் கட்டமாக 16.1 கோடியை செலவு செய்துள்ளது. இதற்கு அந்த மாநிலத்தில் மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அந்த மாநில முதல்வர் ஹிமந்த் விஷ்வா சர்மா அடுத்த அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

அதன்படி அடுத்த ஆண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் கல்வியை மேம்படுத்துவதற்கு மாநில அரசு அயராது உழைத்து வருவதாகவும் அடுத்த வருடம் முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும் எனவும் முதல்வர் ஹிமந்த் விஷ்வா சர்மா தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

x