50 வயது இந்தி ஆசிரியருடன் 17 வயது மாணவி எஸ்கேப்... 3 மாதங்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை!


இந்தி ஆசிரியர்

உத்தரப்பிரதேசத்தில் 17 மாணவியுடன் 50 வயது இந்தி ஆசிரியர் தப்பியோடி 3 மாதங்களாகியும் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் தவித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள கோண்டா மாவட்டத்தில் தேஹத் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த இந்தி ஆசிரியர், 17வயது மாணவியுடன் மூன்று மாதங்களுக்கு முன் தலைமறைவானார். பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்த அந்த இந்தி ஆசிரியருக்கு 50 வயதாகிறது.

அவரிடம் இந்தி படிக்க வந்த 17 வயது மாணவியுடன் தான் அவர் தலைமறைவாகியுள்ளார். வீட்டைவிட்டு ஓடியுள்ள அந்த மாணவி, 30,000 ரூபாய் மற்றும் நகைகளை வீட்டில் இருந்து எடுத்துச் சென்றுள்ளார். மாணவியின் பெற்றோர், உறவினர் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை ஆசிரியர், மாணவியின் பெற்றோர், கிராம மக்களுக்கு அனுப்பினார். இதனால் அவமானமடைந்த மாணவியின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இந்த நிலையில்,வீடியோ குறித்த தகவல் அறிந்த எஸ்.பி அங்கித் மிட்டலின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடந்த 3 மாதங்களாக மாணவியைத் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக மாணவியின் தந்தை கூறுகையில், " இந்தி ஆசிரியர் எனது வீட்டிற்கு அருகில் தான் வசித்து வந்தார். எனது மகளை உயர் பதவிக்குக் கொண்டு வருகிறேன் என்றார். அவர் எனது மகளுடன் ஆட்சேபனைக்குரிய வீடியோவை பதிவேற்றியிருந்தார். இதுகுறித்து புகார் குறித்தும் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய மறுத்தனர். காவல் துறை தலைவரைச் சந்தித்த பின்பே வழக்குப் பதிவு செய்துள்ளனர்" என்றார்.

இதுகுறித்து கோண்டா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவராஜ் கூறுகையில்," ஆசிரியர் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். மேலும் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாணவியுடன் உள்ள ஆசிரியர் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார். விரைவில் மாணவியோடு அவரைப் பிடிப்போம்" என்றார்.

50 வயது ஆசிரியர் 17 வயது மாணவியோடு எஸ்கேப்பாகி மூன்று மாதங்களாகியும் கண்டுபிடிக்க முடியாத விவகாரம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x