உலகின் டாப் 2% விஞ்ஞானிகளில் ஒருவராக இடம் பிடித்தார் கர்நாடக பேராசிரியர்!


கர்நாடகா மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் என்.சந்தீப் என்பவர், உலகின் டாப் 2% விஞ்ஞானிகளின் ஒருவராக இடம்பிடித்திருக்கிறார்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட பட்டியலின்படி, கர்நாடக மாநிலம் கலபுர்கியில் செயல்படும் மத்தியப் பல்கலைக்கழகத்தின் கணிதத்துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றும் என்.சந்தீப் என்பவர் உலகின் முதல் 2% விஞ்ஞானிகளில் ஒருவராக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இந்த தகவலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆர்.ஆர்.பிராதார் உறுதி செய்துள்ளார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் அறிவியல் துறையில் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகளின் தரத்தை அறிய பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதன் போக்கில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் இரு பட்டியல்களைத் தயாரிக்கிறது. முதலாவது வருடாந்திர டாப் 2% விஞ்ஞானிகள் பட்டியல்; மற்றொன்று தொழில் வாரியாக முதல் 2% விஞ்ஞானிகளின் பட்டியல்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்

இதில் உலக விஞ்ஞானிகளின் வருடாந்திர டாப் 2% பட்டியலில் பேராசிரியர் என்.சந்தீப் பெயர் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு இந்தப் பட்டியலில் சந்தீப் பெயர் இடம்பெறுவதில் இது ஐந்தாவது முறையாகும். ஒவ்வொரு ஆண்டும் இவரது தரவரிசை மேம்பட்டு வந்ததில் அதற்கான தனி அங்கீகாரத்தையும் சந்தீப் பெற்றுள்ளார்.

முதன்முறை விஞ்ஞானிகளின் டாப் பட்டியலில் சந்தீப் இடம்பெற்றபோது அவரது ரேங்க் ஒரு லட்சத்துக்கு வெளியே இருந்தது. ஆண்டும்தோறும் முன்னேறி வந்ததில், இம்முறை அது 14,000-ஐ பிடித்துள்ளது. சந்தீப்பின் பெயர் இரண்டாவது பட்டியலான டாப் 2% தொழில்வாரி விஞ்ஞானிகளின் தரவரிசையிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகிறார் காஜல் அகர்வால்!

x