புத்தகப் பை இன்றி பள்ளிக்கு செல்லும் திட்டம்: கேரளாவில் விரைவில் முடிவு


கோப்புப்படம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி மாணவர்கள் அதிக எடையுடன் கூடிய புத்தகப் பையை சுமந்து செல்வதாக அரசுக்கு புகார்கள் வருகின்றன. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கேரள கல்வி அமைச்சர் சிவன் குட்டி கூறியதாவது:

கேரளாவில் மாணவர்களுக்கு ஏற்கெனவே புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுவிட்டன. 1-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ எடை வரை இருக்கவும், 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரை இருக்கும் வகையிலும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

இது தவிர மாதத்தில் குறைந்தது 4 நாட்களுக்கு, புத்தகப் பை இன்றி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து அரசு ஆலோசித்துக் கொண்டி ருக்கிறது. இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

x