‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ மவுசு காரணமாக தெலங்கானா பொறியியல் கல்லூரிகள் புதிய முடிவு


தமிழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வில் கம்யூட்டர் சயின்ஸ் மட்டுமே மாணவர்களின் தெரிவுகளில் முன்னிலை பெற்று வருகிறது. இதனால் இதர பாடப் பிரிவுகள் வரவேற்பு இழந்தது வருகின்றன. இதே போன்ற சூழ்நிலை காரணமாக தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரிகள் புதிய முடிவை எடுத்துள்ளன.

தெலங்கானா மாநிலத்தில் நடப்பாண்டு பொறியியல் கல்லூரி சேர்க்கையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை குறிவைத்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இதனால் இப்பிரிவின் சேர்க்கைக்கும் மாணவர் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. அதே வேளையில் வழக்கமாக சேர்க்கையில் குறை வைக்காத மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பாடப் பிரிவுகள் மாணவர் சேர்க்கையின்றி காற்றாடுகின்றன. சிவில் போன்ற பாடப்பிரிவுகள் சரிவு முகத்தில் இருப்பது வழக்கம் என்ற போதும், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பிரிவுகள் வரவேற்பிழந்திருப்பது கல்லூரி நிர்வாகத்தினரை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

இந்த சூழ்நிலை தெலங்கானா மாநிலத்தில் புதிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தின் சுமார் 100 கல்லூரிகள் தங்களுக்கான மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பாடப் பிரிவுகளின் மாணவர் இருக்கைகளை குறைக்குமாறு பல்கலைக்கழகங்களிடம் விண்ணப்பித்துள்ளதாக இன்று(நவ.3) தகவல் வெளியாகி உள்ளது. தமிழகமும் இதில் விதிவிலக்கல்ல. நான்காம் சுற்று கலந்தாய்வில் இருக்கும் தமிழகத்தின் பொறியியல் படிப்புக்கான சேர்க்கை நிறைவடைந்த பின்னரே இங்கத்திய முழு நிலவரம் தெரிய வரும்.

x