வட்டார, மாவட்ட, மாநில அளவில் 3,806 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடம் நிர்ணயம்: பள்ளிக்கல்வி துறை


சென்னை: வட்டார, மாவட்ட, மாநில அளவில் மொத்தம் 3,806 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிர்ணயம் செய்து பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பிய கருத்துருவை அரசு ஆய்வு செய்து, அதை ஏற்று, பின்வருமாறு உத்தரவிடுகிறது.

அதன்படி, 2024-25-ம் கல்விஆண்டில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் - 10, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் - 286, ஆசிரியர்பயிற்றுநர்கள் (414 வட்டாரங்களில் உள்ள 3,510 குறுவள மையங்களில் தலா ஒரு ஆசிரியர்பயிற்றுநர்) - 3,510 என ஆசிரியர்பயிற்றுநர் மொத்த பணியிடங்கள் 3,806 என நிர்ணயம் செய்யப்படுகிறது.

மேலும், மாவட்ட கல்வி அலுவலகத்தில் தொடக்கக் கல்வி உதவி திட்ட அலுவலர் பணியிடங்களில் பணிபுரியும் 59 பணியாளர்களை அரசுமேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், 67 கல்விமாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை பட்டதாரி ஆசிரியர்களாகவும் தாய்த்துறைக்கு அனுப்பிவைக்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x