‘செயற்கைக்கோள் சிக்னல் கிடைப்பதில் சிக்கல்; முயற்சிகள் தொடர்கின்றன’ - இஸ்ரோ தலைவர் நம்பிக்கை


இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்

இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்திய மாணவிகள் உருவாக்கிய 'ஆசாதிசாட் ' செயற்கைக்கோளிலிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, மதுரை திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகள் உட்பட அரசுப் பள்ளி மாணவிகள் 750 பேர் சேர்ந்து ’ஆசாதிசாட்’ எனும் செயற்கைக்கோளை உருவாக்கி இருந்தனர். அதனை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஶ்ரீஹரிகோட்டா ஏவு தளத்திலிருந்து, எஸ்எஸ்எல்வி டி 1 ராக்கெட் மூலம் இன்று காலை 9 18 மணிக்கு விண்ணில் ஏவியது. அது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிலையில் அதிலிருந்து தகவல் தொடர்பு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்

இதுகுறித்து விளக்கமளித்த இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், “விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் எதிர்பார்த்தபடி அனைத்து நிலைகளும் வெற்றிகரமாகச் செயல்பட்டது. ஆனால் செயற்கைக்கோள் ஏவி 50 நிமிடங்கள் கடந்த நிலையில் அதிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இருப்பினும் சிக்னலைப் பெற அனைத்து நிலைகளிலும் விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

x