மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டல் @ கடலூர்


கடலூர்: கடலூரில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

கடலூர் புதுப்பாளையம் பகுதியில் மாநகராட்சி நடுநிலை பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் இன்று (ஜூன்.26) வகுப்பறை கட்டிடங்களுக்கு அடிக்கல் விழாவுக்கு வந்த மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் காந்திராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது நடுநிலைப் பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்பறைகள் சேதமடைந்து மழை நீர் உள்ளே போகும் அளவில் இருந்ததால் உடனடியாக அதனைச் சீரமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேயர் உத்தரவிட்டார்.

மேலும் அங்கு பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் இருந்த நிலையில் அதனை விரைந்து முடிக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியரை கேட்டுகொண்டார். தொடர்ந்து மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பூமி பூமி பூஜையை தொடர்ந்துஅடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

x