பேரிடர் மேலாண்மையில் முதுகலை டிப்ளமா படிப்பு: இக்னோ பல்கலை. அறிமுகம்


சென்னை: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, பேரிடர் மேலாண்மை தொடர்பான முதுகலை டிப்ளமா படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "இக்னோ பல்கலைக் கழகத்தின் பொது நிர்வாகத்துறை சார்பில் பேரிடர் அபாய தணிப்பு மற்றும் மேலாண்மை பற்றிய ஓராண்டு கால முதுகலை டிப்ளமா படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பில் பட்டதாரிகள் சேரலாம். ஆண்டுக்கு 2 முறை (ஜூலை மற்றும் ஜனவரி) மாணவர் சேர்க்கை நடைபெறும்.

படிப்புக் கட்டணம் ரூ.7,400 மட்டும். இப்படிப்பில், அரசு ஊழியர்கள், தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள், காவல் மற்றும் முப்படையினர், விஞ்ஞானிகள், இன்ஜினியர்கள், பத்திரிகையாளர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி பணியாளர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், நிவாரண பணியாளர்கள், ஆரம்ப சுகாதார மைய பணியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றோர் சேரலாம்.

இந்த படிப்பில் சேர https://ignouadmission.samarth.edu.in/என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இக்னோ பல்கலைக்கழக சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

x