மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள், கையேடு விநியோகம்


சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு திறனை மேம்படுத்த,அனைத்து மாவட்டங்களுக்கும்தலா 70 புத்தகங்கள், வாசிப்புஇயக்க கையேடு ஆகியவற்றைபள்ளிக்கல்வி துறை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவாசிப்பு இயக்கம் செயல்படுத்தப் பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக நுழை, நட, ஓடு, பற என்ற வாசிப்புநிலைகளில் 53 புத்தகங்கள் உருவாக்கப்பட்டு, அனைத்து அரசுப்பள்ளிக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இதன் வெற்றியை தொடர்ந்து, 2024-25 கல்வி ஆண்டில் அனைத்துமாவட்டங்களுக்கும் 70 புத்தகங்கள், வாசிப்பு இயக்க கையேடு ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்விஇயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

சிறு புத்தகங்கள் மூலம் மாணவர்களுக்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தி, தொடர்ந்து அவர்களை வாசிக்க வைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். ‘ஒரு கதை - ஒரு புத்தகம் - 16 பக்கங்கள்’ என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் வயதை கருத்தில் கொள்ளாமல், வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வாசிப்பு இயக்கத்தின் நோக்கம், தேவை, கதை வாசிப்புக்கான நேரம்,தலைமை ஆசிரியர்களின் பணிகள் போன்ற வழிகாட்டுதல்கள் இந்த கையேட்டில் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்க புத்தக தொகுப்புகள் வழங்கப்படும். 4முதல் 9-ம் வகுப்பு வரை காலஅட்டவணையில் நூலக பாடவேளை இருப்பது உறுதி செய்யப்படும். இலக்கிய மன்ற செயல்பாடுகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் பயன்படுத்தப்படும்.

இதுகுறித்து ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

x