ரூ.1 லட்சம் வரை ஊதியம்; கரன்சி அச்சகத்தில் 149 பணியிடங்கள்


நாசிக்கில் செயல்படும் கரன்சி நோட்டு அச்சகத்தின் 149 காலிப் பணியிடங்களுக்கு, ஐடிஐ முதல் டிகிரி வரை படித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இன்று(ஜன.25) நள்ளிரவுடன் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் நிறைவடைகின்றன.

டெக்னிகல் சூப்பர்வசைர், ஜூனியர் ஆபிசர் உட்பட 8 பிரிவுகளுக்கான 149 காலிப் பணியிடங்கள், நாசிக் கரன்சி அச்சகத்தில் காலியாக உள்ளன. இவற்றில் ஐடிஐ, டிப்ளமா மற்றும் டிகிரி என பிரிண்டிங் தொடர்பான பொறியியல் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உதாரணமாக ஜூனியர் டெக்னிசியன் பிரிவில் 125 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவர்களுக்கான சம்பள விகிதம் ரூ18,780 - ரூ67,390 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல வெல்ஃபர் ஆபிசர், 1 காலிப் பணியிடம்(ரூ29,740- ரூ1,03,000); டெக்னிகல் சூப்பர்வைசர், 16 பணியிடங்கள்(ரூ.27,600 - ரூ.95,910).

விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, காலிப் பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல்கள், விண்ணப்ப கட்டணம், சமூகப் பிரிவின் அடிப்படையில் வழங்கப்படும் தளர்வுகள் மற்றும் சலுகைகள், ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள், ஆன்லைன் தேர்வு தொடர்பான முக்கிய தினங்கள், விண்ணப்பதாரருக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்தையும் அறிந்துகொள்ள இங்கே சொடுக்கி விரியும் பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்ப நடைமுறைகளுக்கு, நாசிக் அச்சகத்தின் இந்த அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை நாடலாம். அங்கே view details என்பதை சொடுக்கி கூடுதல் விபரங்களையும், click here to apply online என்பதை சொடுக்கி விண்ணப்ப நடைமுறைகளை பூர்த்தி செய்ய தொடங்கலாம்.

இன்று - ஜன.25 நள்ளிரவு 11.59 மணியுடன் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் நிறைவடைகின்றன. அதற்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்பித்தல், உரிய ஆவண நகல்கள், புகைப்பட பிரதி ஆகியவற்றை தரவேற்றுதல், வங்கி வாயிலாக ஆன்லைனில் கட்டணம் செலுத்துதல் ஆகியவற்றை முடித்திருப்பது அவசியம்.

x