அமெரிக்காவை உலுக்கும் ‘தி கிரேட் ரெசிக்னேஷன்’


கடந்த ஒரு வாரமாக, ‘தி கிரேட் ரெசிக்னேஷன்’ என்கிற சொல் உலாவிக் கொண்டிருக்கிறது. ‘பிரம்மாண்ட ராஜினாமா’ என்ற பொருள் தரும் இந்த சொல் எதைக் குறிக்கிறது?

2021-ம் ஆண்டில் உலகம் தழுவிய பணிச்சூழலின் போக்கு குறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் ஆய்வு நடத்தியது. அதில் அமெரிக்காவில் உள்ள 41 சதவீத பெருநிறுவன ஊழியர்கள், இந்த ஆண்டு தாங்கள் செய்துவரும் வேலையை ராஜினாமா செய்யவிருப்பதாக வெளிவந்துள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில், வீடடங்கி அலுவலகப் பணிகளைச் செய்து ஊழியர்கள் பலர் அலுத்துப்போனதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்துக்குப் போனாலாவது 8 மணிநேரம் மட்டும்தான் வேலை. ஆனால், வீட்டில் இருந்தால் எந்நேரமும் வேலை. போதாக் குறைக்குச் சம்பளப் பிடிப்பு வேறு. இந்நிலையில் பெருவாரியான ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதிலும் பெண் ஊழியர்கள் குழந்தை வளர்ப்பு, வீட்டுப் பராமரிப்பு உள்ளிட்ட அத்தனை பொறுப்புகளையும் சுமந்தபடியே அலுவல் பணிகளையும் செய்து முடிப்பது சுமையாக மாறியுள்ளது. ஆகையால், நிறுவனங்களும் நிர்வாகமும் ஊழியர்களின் மனநலத்தையும் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட வேண்டிய அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய சம வாய்ப்புகொண்ட ஜனநாயக பணிச்சூழலை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை, இந்த அறிக்கை ஏற்படுத்தியுள்ளது.

‘வர்க் ஃப்ரம் ஹோம்’ எனும் நவீன அடிமைத்தனம்: நிரந்தர வேலைக்கும் வேட்டுவைக்கும் அறிக்கை!

x