கோவை: மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு, இரண்டரை வயதில் மகள் உள்ளார். இச்சிறுமி யை தவறான தொடுதல் செய்து ஒருவர் பாலியல் தொல்லை அளித்தார்.
இது குறித்து அச்சிறுமியின் பெற்றோர், கிழக்குப் பகுதி அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரி்த்தனர். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர், தெற்கு உக்கம் எஸ்.ஹெச் காலனியைச் சேர்ந்த செல்வகுமார் (33) எனத் தெரிந்தது. இதையடுத்து அவரை மகளிர் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.