அண்ணா சிலை மீது பாஜக கொடிகள் அணிவிப்பு - தஞ்சையில் போலீஸ் விசாரணை


தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை மீது நேற்று பாஜக, திமுக ஆகிய கட்சிகளின் கொடிகளை இணைத்து, மாலை போன்று அணிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸார் வந்து, சிலை மீது இருந்த கொடிகளை அகற்றினர்.

இதற்கிடையே, அண்ணா சிலை அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற திமுக மகளிர் அணி, முகவர்கள், தொண்டர் அணி பயிற்சிப் பட்டறை கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுகவினருக்கு, அண்ணா சிலை மீது பாஜக கொடி அணிவிக்கப்பட்ட தகவல் கிடைத்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் அங்கு சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டுச் சென்றனர்.

இது குறித்து போலீஸார் கூறியபோது, “மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் இச்செயலில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

x