திருப்பூர் பனியன் நிறுவனங்களில் தீ விபத்து


பெருமாநல்லூரை அடுத்த அய்யம்பாளையத்தில் சுரேஷ், ஸ்ரீதர் ஆகியோருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத் தில் பேப்ரிக், பேக்கிங், ஸ்டிச்சிங் என பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று அதிகாலை பனியன் நிறுவனத்தில் இருந்து புகை வருவதை காவலாளி பார்த்தார். உடனடியாக நிறுவன உரிமையாளர்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து, 2 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பனியன் நிறுவனத்தில் இருந்த பின்னலாடை இயந்திரங்கள், துணிகள் கருகின. பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.

அதேபோல் திருப்பூர் கஞ்சம்பாளையம் பிரிவு பகுதியில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பனியன் வேஸ்ட் தயாரிக்கும் கிடங்கு உள்ளது. நேற்று அதிகாலை கிடங்கில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து அக்கம்பக்கதினர், வடக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

x