கோவை: பங்கு வர்த்தக முதலீட்டில் லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ.44.84 லட் சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை இடையர்பாளையம் டி.வி.எஸ் நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் மனைவி காவ்யா(30). இவரை கடந்த மாதம் இன்ஸ்டா கிராம் முகவரி மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர். வீட்டிலிருந்த படி ஆன்லைன் மூலம் லாபம் ஈட்டலாம் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து அந்நபர். காவ்யாவை ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைத்து. டாஸ்க் அளித்துள்ளார்.
பின்னர், அந்நபர் கூறியபடி, காவ்யா பல்வேறு தவணைகளில் ரூ.25.67 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். ஆனால், கூறியபடிலாபத் தொகை கிடைக்கவில்லை. முதலீட்டு பணத்தையும் எடுக்க முடிய வில்லை. தான் மோசடி செய்யப் பட்டதை அறிந்த காவ்யா கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.
கோவை பேரூர் பிரதான சாலை. செல்வபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(36). ஐ.டி நிறுவன் ஊழி யர். இவர். பகுதிநேர வேலை வாய்ப்பு உள்ளதா என் ஆன்லைன் மூலம் தேடியபோது. கடந்தஜனவரி மாதம் வாட்ஸ் அப் மூலம் ஒருவர் அறிமுகமானார். ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு
செய்தால் லாபம் கிடைக்கும் என அவர் கூறியுள்ளார். அதை நம்பிய கார்த்திக், பல்வேறு தவணைகளில் ரூ.8.07 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். ஆனால், லாபமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
சரவணம்பட்டியில் உள்ள ராமானந்தா நகரைச் சேர்ந்தவர் முகமது அயூப் மனைவி சுஜனா பானு (39). கடந்த ஜனவரி மாதம் இவரை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர். பங்கு வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
அதை நம்பிய சுஜனா பானு, மர்மநபர் கூறியபடி பங்கு வர்த்தக நிறுவனத்தின் செயலியை பதி விறக்கம் செய்து, அதில் பல்வேறு தவணைகளில் ரூ.11.10 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். ஆனால். லாபமும் கிடைக்க வில்லை.முதலீட்டுத் தொகையை யும் எடுக்க முடியவில்லை. சுஜனா பானு கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
மேற்கண்ட மூன்று நபர்களிடம் மொத்தம் ரூ.44.84 லட்சம் மோசடி தொடர்பாக. அடையாள தெரியாத நபர்கள் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.