பட்டா மாறுதலுக்கு ரூ.3,000 லஞ்சம்: அந்தியூரில் கிராம நிர்வாக அலுவலர் கைது


ஈரோடு: அந்தியூர் அருகே பட்டா மாறுதல் செய்ய, ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இடைத்தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செல்லப்பகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாய நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய மேம்பத்தி கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷை அணுகியுள்ளார். இதற்கு ரூ.5,000 லஞ்சம் தர வேண்டும் என பிரகாஷ் கேட்டுள்ளார். இதன்பின்னர், ரூ.3,000 மட்டும் கொடுத்தால் போதும் என வி.ஏ.ஓ. தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் கதிர்வேல் புகார் அளித்தார். இதன்பேரில், ஏடிஎஸ்பி ராஜேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், கிராம நிர்வாக அலுவலகம் அருகில் மறைந்திருந்தனர். பிரகாஷை சந்தித்து கதிர்வேல் பணம் கொடுத்தபோது, அவரது அருகில் நின்றிருந்த இடைத்தரகர் அருள்ராஜா பணத்தை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

x