குடிநீர் இணைப்புக்கு ரூ.6,100 லஞ்சம்; பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி ஊராட்சி செயலர் கைது


கோவை: பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர், குடிநீர் இணைப்பு பெறுவதற்கு மாக்கினாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது, ஊராட்சி செயலர் செந்தில்குமார், அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ.2,900-ஐ விட கூடுதலாக ரூ.6,100 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மாணிக்கவாசகம் கோவை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பிய லஞ்ச ஒழிப்பு போலீஸார், மாணிக்க வாசகம் பணத்தை கொடுக்கும் போது அதை வாங்கிய செந்தில் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வாளர் எழிலரசி தெரிவித்துள்ளார்.

x