திருச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: 2 இளைஞர்கள் கைது


திருச்சி: மணப்பாறையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு அருகில் சென்றபோது, பண்ணப்பட்டி பன்னாங்கொம்பு பகுதியை சேர்ந்த பார்த்திபன் (22), சீத்தப்பட்டியை சேர்ந்த அஜித்குமார் (23) ஆகியோர் அந்த மாணவி யிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டுள்ளனர்.

அந்த மாணவி சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அப்போது, இருவரும் தப்பியோடி விட்டனர். இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸார், போக்கேசா பிரிவில் வழக்குப் பதிவு செய்து, பார்த்திபன், அஜித்குமாரை ஆகியோர் கைது செய்தனர்.

x