திருவாரூர் ஆட்சியரின் பெயரில் போலியான முகநூல் கணக்கு: மக்களுக்கு அறிவுறுத்தல்


திருவாரூர் மாவட்ட ஆட்சியராக கடந்த பிப்.3-ம் தேதி மோகனசந்திரன் பதவியேற்று, பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சமூக வலை தளமான முக நூலில் மோகன சந்திரன் ஐஏஎஸ் என்ற பெயரில் அவரது புகைப் படத்துடன் கூடிய போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த போலி கணக்கு தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் தெரியவந்ததையடுத்து, திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் சார்பில், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், திருவாரூர் ஆட்சியரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி முகநூல் கணக்கு செயல்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் யாரும் பின் தொடர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பதிவில் ஆட்சியரின் உண்மையான முகநூல் பக்கம், போலி முகநூல் பக்கம் ஆகிய இரண்டையும் வேறுபடுத்தி காட்டும் புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டிருந்தன.

x