மகளுக்கு பாலியல் தொல்லை: தாயின் ஆண்நண்பர், தாய் உட்பட 3 பேர் கைது - ராமநாதபுரம் கொடுமை


ராமநாதபுரம்: சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தாயின் ஆண் நண்பரான கல்லூரி மாணவர், உடந்தையாக இருந்த தாய் மற்றும் ஒரு இளைஞர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி உடல்நலக்குறைவால் சோர்வாக இருந்துள்ளார். அவரிடம் ஆசிரியர் ஒருவர் விசாரித்தபோது, தன்னை இரு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஆசிரியர் ராமநாதபுரம் சைல்ட் லைனுக்கு புகார் செய்தார். இதனையடுத்து கண்காணிப்பாளர் கிருஷ்ணவேணி மற்றும் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸார் சிறுமியிடம் விசாரணை செய்தனர். அப்போது தனது தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், தனது தாயுடன் தொடர்பில் உள்ள இளைஞர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார்.

தொடர்ந்து அச்சிறுமியின் தாயை விசாரித்ததில் கோவை கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.டெக் படித்து வரும் ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவை யை சேர்ந்த இளைய ராஜா மகன் நவீன் (21) என்பவருக்கும், தனக்கும் தொடர்பு இருப்பதும், விடுமுறைக்கு வரும்போது, தனது மகளான மாணவிக்கு ம் தொந்தரவு செய்தது குறித்து தெரிவித்துள்ளார். இதேபோன்று அந்த மாணவி படிக்கச் சென்ற டியூசன் ஆசிரியை ஒருவரின் மகன் பரத் (19) என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதனையடுத்து அனைத்து மகளிர் போலீஸார், தாய், இவரின் ஆண் நண்பர் நவீன், டியூசன் ஆசிரியை மகன் பரத் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

x