ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் மேலாளராக பணிபுரிந்தவர் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட்!


விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் மேலாளராக பணியாற்றிய பாபு ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் பாபு (60). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் மேலாளர் மற்றும் ஆணையர் (பொறுப்பு) தனி அலுவலராக பணியாற்றிய போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு விசாரணையில் பாபு அரசு அனுமதி இல்லாமல் சில சொத்துகளை வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து பாபு மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்பேரில் பெரம்பலூர் நகராட்சி கணக்காளராக பணிபுரிந்து வந்த பாபு மார்ச் 31ம் தேதி ஓய்வுபெற இருந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் சிவராசு உத்தரவிட்டார்.

x