கயத்தாறு அருகே கோயிலில் பொட்டுத்தாலி, உண்டியல் திருடியவர் கைது


தூத்துக்குடி: கயத்தாறு அருகே தெற்கு கோனார்கோட்டையில் மாரியம்மன், காளியம்மன் கோயில் உள்ளது.

இங்கு அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த 13 கிராம் பொட்டுத்தாலி மற்றும் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் ஆகியவை திருடப் பட்டிருந்தன. கயத்தாறு போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக கோவை கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற இசக்கிபாண்டி (40) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

x