சென்னை | மது அருந்​திய தகராறில் இளைஞர் கொலை: நண்​பருக்கு வலைவீச்சு


சென்னை: சென்னை பெர​வள்​ளூரை சேர்ந்​தவர் சந்​துரு(26). இவரும் இவரது நண்​பர் பெங்​கால் என்​பவரும் மது அருந்தி கொண்​டிருந்​தனர். அப்​போது, இரு​வருக்​கும் வாய்த் தகராறு ஏற்​பட்​டது. பின்​னர் சந்​துரு, மற்​றொரு நண்​பர் சந்​தோஷ் என்​பவருடன் பேசிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது, சந்​துருவை பெங்​கால் கத்​தி​யால் குத்​தி​விட்டு தப்பினார். இதில் பலத்த காயமடைந்த சந்​துருவை பெரி​யார் நகர் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு மருத்​து​வர்​கள் பரிசோதனை செய்​து சந்​துரு ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தனர். பெர​வள்​ளூர் போலீ​ஸார் வழக்கு பதிந்​து, பெங்​காலை தேடி வரு​கின்​றனர்.

x