போக்சோவில் கைதான தக்கலை வழக்கறிஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


போக்சோ வழக்கில் கைதான தக்கலை வழக்கறிஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடந்த 13-ம் தேதி 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகளான இரு பள்ளி மாணவிகள் வீட்டை விட்டு சென்றனர். இது குறித்து தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவுப் படி காவல் துறையினர் மாணவிகளை கண்டறிந்து மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் .

கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தொழில் நுட்ப உதவியுடன் போலீஸார் இரு மாணவிகளையும் மீட்டனர். விசாரணையில் மாணவிகளை தனது அலுவலகத்துக்கு ஏமாற்றி அழைத்துச் சென்று, 8-வது வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தக்கலை இலப்பகோணம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.பி. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அஜித்குமார் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

x