வியாசர்பாடியில் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த இளம்பெண் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி கூட்ஷெட் ரோட்டில் போலீஸார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அதில் டைடல் எனும் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரிந்தது.
இது குறித்து நடத்திய விசாரணையில், வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, மாதவரத்தை சேர்ந்த கீர்த்திவாசன் (24), மணலி சுல்தான் அலாவுதீன் (34), வியாசர்பாடி கார்த்திகேயன் (23), ரூபன் (24), ஐஸ்வர்யா (25), கவுதம் (21) ஆகிய 6 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 570 உடல் வலி நிவாரண மாத்திரைகள், 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.