கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி வெள்ளச்சி(40). சுப்பிரமணியன் சுமார் 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். வெள்ளச்சி, அவரது குழந்தைகள் மற்றும் தங்கை, அவரது குழந்தை அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதே ஊரில் வசித்து வரும் செந்தில் மள்ளர் (47) என்பவர் கடந்த 26-ம் தேதி இரவு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வெள்ளச்சியை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றுள்ளார். மேலும், வீட்டில் இருந்தவர்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து செந்தில் மள்ளரை கைது செய்தனர்.