நீட்டால் பறிபோன அடுத்த உயிர்... தேர்வு அச்சத்தில் சென்னை மாணவி தற்கொலை


சென்னை: கிளாம்பாக்கம் அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தனியார் அகாடமியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தர்ஷினி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் சாஸ்திரி பவன் பகுதியை சேர்ந்த செல்வராஜ் - தேவி தம்பதிக்கு இரண்டு மகள்கள். செல்வராஜ் ஐயன்சேரி பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரின் மூத்த மகள் தேவதர்ஷினி, சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2021 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்துள்ளார். பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி மாணவிக்கு கட் ஆப் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் அவர் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் அகாடமியில் 40.05.2025ல் நடக்க உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி நேற்று மாலை வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிளாம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் நீட் தேர்வு அச்சத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

x