ஏடிஎம் இயந்திரத்தில் கள்ளநோட்டு செலுத்தி மோசடி: பர்கூர் மூங்கில் வியாபாரி கைது


ஈரோடு: ஏடிஎம் இயந்திரத்தில் கள்ள நோட்டுகளை செலுத்திய மூங்கில் வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்யும் வசதி உள்ளது. இவ்வாறு டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் ரூ.4,700 மதிப்பில் கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து சிவகிரி போலீஸில் வங்கி மேலாளர் புகார் அளித்தார்.

ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பர்கூரைச் சேர்ந்த மூங்கில் வியாபாரி ராமு என்பவர் கள்ள நோட்டை செலுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த சிவகிரி போலீஸார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x