7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: திருப்பத்தூரில் கட்டிட தொழிலாளி கைது


திருப்பத்தூர்: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் பகுதியில் கோயில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி அந்த கோயில் அருகே நேற்று விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு கட்டிட வேலை செய்து வந்த ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த முனி ரத்தினம் (56) என்பவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் கட்டிட தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x