பெண்ணை ஏமாற்றிவிட்டு சிங்கப்பூருக்கு பயணம்: ஊர் திரும்பிய திருவாரூர் நபர் விமான நிலையத்தில் கைது


திருவாரூர் மாவட்டம் வடபாதி மங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, அணக்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக, திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே. பாலமுருகன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு, சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து, போலீஸார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, பால முருகனுக்கு லுக் அவுட் நோட்டீஸை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பால முருகனை திருவாரூர் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x