தஞ்சையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 70 வயது முதியவர் போக்சோவில் கைது


தஞ்சாவூர்: வல்லம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்லாம் கான்(70). இவர், அண்மையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, அஸ்லாம் கானை நேற்று முன்தினம் இரவு கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

x