பெரம்பலூர்: லாடபுரம் கிராமத்தில் 2013ம் ஆண்டு ஒரு பெண் மற்றும் அவரது 2 குழந்தைகளை கடத்திச் சென்று 17 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு, 3 பேரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கில் கோயம்புத்தூர் மாவட்டம் சுல்தான்பேட்டை இடையார் பாளையத்தைச் சேர்ந்த செ.மணிகண்டன்(36) என்பவர் கைதானார்.
பின்னர், ஜாமீனில் வெளியே வந்தவர் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், பெரம்பலூர் போலீஸார் நேற்று முன்தினம் மணிகண்டனை கைது செய்து, பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.