கர்ப்பமான சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு: சிவகங்கை இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை


சிவகங்கை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே 16 வயதுடைய பிளஸ் 2 படித்து வந்த சிறுமி, கடந்த 2016 நவம்பர் 17-ம் தேதி மாயமானார். அவரது தாயார் அளித்த புகாரின்பேரில், காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

அதில் அச்சிறுமி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த சிவா (30) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சிவாவுக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். ஆனால், கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

x