புதுச்சேரி சிறுமி பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க கூடாது: நீதிமன்றத்தில் பெண்கள் மனு


புதுச்சேரி: தவளக்குப்பம் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 14ம் தேதி ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

இவ்வழக்கில், அதே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு, கடத்த 40 நாட்களாக காலாப்பட்டு சிறையில் உள்ளார். அவரின் ஜாமீன் மனு நேற்று புதுவை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இது குறித்து கேள்விப்பட்ட திமுக மகளிரணி மாநில செயலாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் தலைமையில் பல்வேறு பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் நீதிமன்றத்துக்கு வந்து, குற்றம்சாற்றப்பட்ட ஆசிரியர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என நீதிபதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மகளிர் அமைப்பினர் ஒன்றாக நீதிமன்றம் சென்று மனு அளிப்பது இதுவே முதல் முறையாகும்.

தொடர்ந்து நீதிமன்றத்தின் வெளியே வந்து அவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி, நீதிமன்ற நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சமாதானப் பேச்சு நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

x